Monday, February 25, 2008

2 : வான் சிறப்பு

1. இறைவனுக்கு அடுத்த படியாக இவ்வுலகத்தைக் காத்து நிற்பது மழை. அதனால் தான் தமிழன் மழையைக் கடவுளாகக் கண்டான். இறைவன் உலகும் உயிருமாய் நிறைந்து நிற்கின்றான்.

2. வானத்தில் இருந்து மழை பொழிந்து இவ்வுலகைக் காப்பதால் அது உலகத்தார்க்கு அமிழ்தமாகும்.

3. மழை உண்பவர்க்கு உண்ணக் கூடிய உணவை விளைவித்துத் தந்து இன்றியமையாத நேரத்துத் தானும் உணவாகிறது. உடலுக்கு உயிர் போல் உலகிற்கு மழைத்துளி.

4. வானம் மழை பொழியத் தவறினால் இப்பெரிய உலகத்தே பசித்துன்பம் பெருகும். உணவின்றி உயிர்கள் வாடும். கடல் சூழ்ந்த உலகென்றாலும் கண்ணீர் சிந்தும் பசியால்.

5. மேகங்கள் மழை பொழிய மறந்தால் உழவர்கள் உழுதொழில் செய்ய மாட்டர். ஏர்த்தொழில் பாரில் மறைந்தே போகும். உலகம் எப்படி வாழும் ?

6. ஆக்குவதும் அழிப்பதும் மழைக்கு கை வந்த கலை. வெள்ளப் பெருக்கால் அழிவை ஊட்டும். பஞ்சத்தைப் போக்க பார் மழை பொழியும். இதனால் இவ்வுலகிற்கு மழையே இறைவன்.

7. வானத்திலிருந்து ஒரு மழைத்துளி கூட விழா விட்டால் இம்மண்ணுலகில் சிறிய பசும் புல்லைக் கூட நாம் காண முடியாது. புல்லே முளைக்கா- தென்றால் மரம் செடி கொடிகள் பயிர்கள் தான் ஏது ? உயிர்கள் வாழ வழிதான் ஏது ?

8. மழை இல்லை யென்றால் புல் என்ன கடலே இல்லை. மேகம் வளம் குறைந்து வறண்டு போனால் வெண் மேகங்களே வானில் மிதக்கும். பின் எப்படி கடல் நீர் புரளும் ?

9. மழை பொழியாவிட்டால் மக்களுக்கு மட்டுமல்ல துயரம். மக்கள் போற்றும் தெய்வங்களுக்கும் வழி பாடில்லை. நீரின்றி பூசை எப்படி நடைபெறும் ? வாழ வழி இல்லை என்றால் வழிபாடு ஏது ?

10. மழைத்துளி இல்லை என்றால் உலகில் வாழ்க்கை முறை தடுமாறும். இல்லாதார்க்குக் கொடுக்கின்ற இல்லறத்தானும் தவமேற்கொள்ளூம் துறவறத்தானும் எப்படி வாழ்வர் ? வழியின்றித் தவிப்பர்.

நீரின்றி இந்த உலகமே இல்லை. வயிற்றுக்கு உணவின்றி, வாழ்விற்கு வழி பாடின்றி, மண்ணுக்கு வளமின்றி, வாழ்க்கை எப்படிச் சிறக்கும் ? வாழ்க்கை ஒழுக்கங்கள் எப்படி நிலைக்கும் ? மழையின்றி மண்ணுலகில் மானிடமே இல்லை ! உயிர்கள் நிலைத்து வாழ மழை இன்றியமையாது.

தொடரும் ...........

6 comments:

')) said...

சோதனை மறு மொழி

')) said...

எனக்கு கூட மழை ரொம்ப பிடிக்கும் அந்த ஸ்ரேயா புள்ள நடிச்சதுதானே.

')) said...

ச்சும்மா தமாசுக்கு கோச்சுக்காதீங்க

')) said...

உண்மையான உண்மை... மழை இல்லேன்னே எவ்வளவு பிரச்சினைகள்?

உரையுடன் குறளையும் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும் என்பது என் கருத்து... முடிஞ்சா பண்ணுங்க... நன்றி...

')) said...

சிவா - வாப்பா - மழையைப் பத்தி பேசுன்னா - ஷ்ரேயா பத்திப் பேசுறியா - நான் வெயில் பாத்தேன் - மழை பாக்கலே - மாமா கூட்டிட்டுப் போகலே

மறுமொழிக்கு நன்றி சிவா

')) said...

ச்சின்னப் பையன் - வருகைக்கும் பரிந்துரைக்கும் நன்றி - கவனத்தில் கொள்கிறேன் - சிந்திக்கிறேன்