Friday, February 22, 2008

வள்ளுவனின் வாய்மொழி

வான் மறையாம் வள்ளுவம் நாம் என்றைக்குப் படித்தாலும் அது புதுமைதான். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்பது போல் குறள் நாளும் நமக்கொரு சேதி சொல்லும். தாசுமகாலில் உள்ள கல்லைப் பெயர்த்தாலும் பெயர்க்கலாம் - ஆனால் திருக்குறளில் உள்ள ஒரு சொல்லைப் பெயர்க்க முடியாது என்ற இம்மொழி உண்மை தான். உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.

தமிழன் எதனையும் வேதமென்று எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டான். அப்படிப்பட்ட அவனே திருக்குறளை தமிழ்மறை என்று ஒத்துக் கொண்டுள்ளான் என்றால் உண்மையில் இது வியப்பன்று ! வேதம் என்பது என்ன ? மனிதனைத் துன்பத்திலிருந்து கை தூக்கி விடுவது தான் வேதம். இதனை நான் கூற வில்லை. வேத விற்பன்னன் பாரதி கூறுகின்றான். அவன் சமயங்களை எல்லாம் சாமர்த்தியமாய்ச் சந்தித்தவன்!

பக்குவப்பட்ட மனத்திற்கு பாதை காட்டுவது கீதை மட்டுமன்று - குறளும் தான்!. நினைவு - சொல் - செயல் மூன்றும் நேரியதாய் இருக்க வேண்டும் - தூயதாய் இருக்க வேண்டும் என்பது தான் திருக்குறளின் அடிப்படைக் கருத்து. அறம் பொருள் இன்பம் என்ற மூன்று நிலைகளிலும் இக்கருத்தே வலியுறுத்தப் படுகிறது. அவ்வழியில் முதலில் நிற்பது இறைமை!

தொடரும்........



4 comments:

')) said...

சோதனை மறுமொழி

')) said...

அணுவை துளைத்து ஏழ் கடலை புகுத்துவது குறள் - ஒரு குறளில் ஏழு பொருள் இருக்கலாம் என்பது என் வெகுநாள் ஐயம், ஆராய கால அவகாசம் தான் இல்லை!

')) said...

நன்றாகச் சொன்னீர்கள்!

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவா