Tuesday, June 17, 2008

சிவாசி மற்றும் சிலேபி பற்றி ......

சதங்கா அழைத்து விட்டார் - எதற்கு ?

சிவாசி வாயிலே சிலேபியாம் - இது தொடராம் - மூவர் மூவராக அழைக்க வேண்டுமாம். விதி முறைகள் கடுமையாக இருக்கின்றன.

அக்காலகட்டத்தில் ஒரு அஞ்சலட்டை வரும்( இக்காலத்திலும் தான்) - அதை 10 பேருக்கு அனுப்பினால் கோடீஸ்வரனாகலாம் - இல்லையெனில் தலை சுக்கு நூறாய்ச் சிதறும் என்று. நாங்களும் அனுப்பி அனுப்பி கோடீஸ்வரர்கள் ஆனோம்.

நிற்க ( எல்லோரும் எழுந்து நிக்காதீங்க)

எப்படித்தான் எல்லாரும் சிலேபி சுத்தறாங்களோ தெரியல - நானும் சிக்கலில்லாம ஒரு சிலேபியாச்சும் சுத்திடலாமுன்னு பாக்கறேன். அது எப்படி அடுக்கடுக்கா ! அழகழகா ! நூல் கட்டி கண்ணாடித் தடுப்புக்குள்ள - அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு !

என்ன சொன்னாலும் இந்த "ஜி" யைப் பாருங்க - எத்தன வளைவு - எத்தன நெளிவு - அந்தக் கொம்புலே - அத விடுங்க.

அந்த "லே" - அதுக்கு ஒரு தனிக்கதையே இருக்குங்க - ஆமா - ஒரு குட்டிப்பையன் வந்தான் - தமிழ் படிக்க ! மிஸ் மிஸ் நான் நவீன் - எனக்கு தமிழ் டிக்டேசனே வர மாட்டெங்குதுன்னான். "லே" போடுன்னா அவன் கேட்டான் - மிஸ் லாங்கா ஷர்ர்ட்டா ? இல்லல்ல - ஜஸ்ட் லைக் ஃபோன். எப்படி இருக்கு "லே" போட்ட கதெ. ( குறிப்பு : அவன் கேட்டது குறிலா நெடிலான்னு - ஃபோன் அப்படின்னா லாங்குன்னு பதில்)

ஒரு வேளை சிவாசி சிலேபி சாப்பிட்டாரா சாப்பிடலயான்னு யாருக்குத் தெரியும் ? எல்லாரும் சேர்ந்து அவர் வாயிலே சிலெபியைத் திணிச்சிட்டாங்க. எப்படியோ அவரும் சிலேபிய சகிச்சிக்கிட்டாரு. ஏன்னா பஜ்ஜி சொஜ்ஜி போல இல்லாம ஜூஸியா இருக்கறதாலெ ! அப்படியே வாயிலே போட்டாரு - நழுவிடுச்சி !

வீர சிவாசி பத்தி உங்களுக்கெல்லாம் தெரியுமா ? எனக்குத் தெரியுமே !!

ஏன்னா எங்க வீட்டுக் கண்ணுக் குட்டி நர்சரிலே படிச்சப்போ, "இ" போடுடா கண்ணான்னா, வேக வேகமா வந்து நாலு கோடு போடும் - "E" . இது இல்லடா கண்ணா - அ ஆ இ போடுடான்னா, சரிசரின்னு தல ஆட்டிட்டு சுத்தோ சுத்துன்னு வட்டவட்டமா சுத்தும். நிறுத்தவே நிறுத்தாது. ஏய்! ஜிலேபியா சுத்தறே நீன்னு தொடையிலே ஒரு படார். அதுக்கப்புறம் "இ"க்கண்ணா எழுதறப்ப அப்பா பக்கமே போகாது. எப்படி எங்க வீட்டு "இ".


இந்தக் கண்ணுக்குட்டி, "இ" போட்டது தான் எனக்கு இங்கே சிலேபி சுத்த உதவிச்சு. ஆமா ! அந்தக் கண்ணுக்குட்டி அதுக்கப்புறம் பாருங்க ! குட்டியா இருந்துக்கிட்டே ஒரு அஞ்சு நிமிடம் அழகான தமிழ்லே வீர சிவாசி வசனம் பேசுச்சு பாருங்க ! ஆடீட்டோரியமே அசந்து போச்சு ! எப்படி சிவாசி !

சிலேபி சாப்பிட்டா மட்டும் போதாதுங்க ! சிவாசி மாதிரி வீரமா இருக்கணும். ஜெய் பவாணி !!!
ஆமா - நானு மூணு பேர அழைக்கணுமாமில - அழைச்சிடுவோம்
1. பாசமலர்
2. புது வண்டு
3. நிலா

17.06.2008 - செல்விஷங்கர்

22 comments:

')) said...

aahaa! azhagu tamizh, elliya tamizh, rasikumbadiyaa irukku,
sivajiyum, jilabiyum, unga yelaarukkum romba kadama pattirukaanum! avanga saarbila nandri! pillaingalukku english-la solliyaavadhu tamizh-a solli kudutha teacher vaazhga!

vaazhthukkal! -- noddykanna

')) said...

செல்வி ஷங்கர் மேடம்,

அழைப்பை ஏற்று, கச்சிதமாக சிலேபி ஜுத்தியதற்கு நன்றிகள் பல.

வாழ்த்து அட்டை அனுப்பியதில் இருந்து, தமிழ் கற்பித்தல், ஜூஸியா ஜிலேபி, சிவாஜி வாயில போட்டுக்கிட்டது, பின் உங்க வீட்டு கண்ணுக்குட்டி 'இ' போட்டது அனைத்து சுவாரஸ்யம். போட்டால இருக்கது கூட கண்ணுக்குட்டி தானா ? ?

வீரமா இருக்கனும்னு சொன்னதும் அருமை !!!

')) said...

நன்றி நாடிக்கண்ணா !!

வரவிற்கும் கருத்துகளுக்கும்

')) said...
This comment has been removed by the author.
')) said...

ஹேய் - நீயும் மொக்க போட ஆரம்பிச்சிட்டியா - உருப்பட்டாப்லதான் !

')) said...

சதங்கா,

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

ஆமா - எங்க வீட்டுக் கண்ணுக்குட்டி தான் - போட்டால

ம்ம்ம்ம்ம்ம்ம்

')) said...

ஆஹா ஆச்சி என்னையும் இழுத்துவிட்டாச்சா? ஹ்ம்ம் இந்த ஆட்டம் ஆரம்பிக்கும் போதே யாராச்சும் மாட்டிவிட்டுட கூடாதேன்னு பயந்தேன் :P. சரி இப்பத்தான் முதன் முதலா மொக்கை போட ஆரம்பிச்சிருக்கீங்க. உங்களை தொடர்ந்து மொக்கை போட வைப்பதற்காகவே எழுதனும் போல இருக்கு.

எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க ஆச்சி. என்னோட டைப்பிஸ்ட் கொஞ்சூண்டு பிஜியா இருக்கார். சீக்கிரமா போஸ்ட் போட்டுடரேன்

')) said...

புதுவண்டு:(வடிவேலு ஸ்டைலில்...)

ஆஹா! என்னாதிது? சின்னபுள்ளத் தனமா?

இதுல நான் வேறயா......ஜிலேபி சாப்புடுற விளையாட்டெல்லாம் வைக்காம இதென்ன, சின்னபுள்ளத் தனமா, பதிவு எழுதுற விளையாட்டு...

செல்வி அம்மா:அது சரி! வசனம் என்னமோ வீரமாத் தான் இருக்கு.ஆனா கால் ஏன் நடுங்குது?

புதுவண்டு:பில்டிங் ஸ்டாராங், பேஸ்மெண்ட் வீக்...இதலெல்லாம் கேக்கக் கூ.....டா.....து.


பி.கு.:சரி,பதிவு போட ஒரு மேட்டர் கடச்சிடுச்சு.:)))))) :D :D

')) said...

நிலா - நிலா - ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
சிவாசி வாய்க்கு சிலேபி கொண்டு வா

நீ - குட்டிப் பேத்தி இல்ல - எப்ப வேணும்னாலும் பதிவு போட்டுக்க - உன்னோட டைப்பிஸ்ட் கிட்டே சொல்லு - ஆச்சி அவசரப்படுறாங்கன்னு.

நல்வாழ்த்துகள் செல்லம்

')) said...

புது வண்டே !!

சின்னப்புள்ளே எல்லாம் சிவாசி பத்தி எழுதணும்னா கால் நடுங்அக்தான் செய்யும் ( ஆமா கை தானே நடுங்கணும் - ஏன் கால் நடுங்குது)

பரவா இல்ல - பாத்து எழுதும்மா

நல்வாழ்த்துகள்

')) said...

நாடிகண்ணா அத்தை மட்டும் ஏன் பதிவு ஆரம்பிக்காம இருக்காங்க?

')) said...

விஜய்

பதிவு பார்க்கிறேன் - நன்றி தகவலுக்கு

')) said...

நிலாச் செல்லம்,

இந்தக் கேள்வி நாடிக்கண்ணாவிடம் அல்லவா கேட்க வேண்டும் - அவர் அத்தையா - அக்காவா ? டைபிஸ்டு தப்பு தப்பாச் சொல்லித் தராறா ?

')) said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆமாங்க ஆச்சி. இது டைப்பிஸ்ட் மிஸ்டேக்தான் ... நாடிக்காவை பதிவு ஆரம்பிக்க சொல்லுங்க

')) said...

செல்வி அம்மா!

எங்க கூட்டுக்கு வாங்க! வந்து நான் பண்ணீருக்கக் கொடுமை என்னான்னு பாருங்க! :-0

')) said...

நிலா - நாடி அக்காவிடம் சொல்லிட்ட்டேன் - செய்யுறேன்னு சொன்னாங்க

')) said...

உங்க வீட்டுக் கண்ணுக்குட்டி வீர சிவாசி வேடமிட்டு மேடையிலே வீர வசனம் பேசியக் கண் கொள்ளா காட்சி ஒன்றே போதாதா...மொக்கய டக்கராக்க.

')) said...

நன்றி ராமலக்ஷ்மி - மொக்கய டக்கராக்கணும்னு தான் நினைச்சேன் - அப்புறம் விட்டுட்டேன் - இருப்பினும் எங்க வீட்டுக் கண்ணுக்குட்டி தூள் கிளப்பும்ல

')) said...

சிவாஜியின் சங்கலித் தொடரில் நான் அழைப்பு விடுத்த சதங்காவினால் அழைக்கப் பட்டவராயிற்றே நீங்கள்!உங்கள் படைப்பை பார்க்காமல் இருப்பேனா? உங்க வீட்டுக் கண்ணுக்குட்டிய உச்சி முகர்ந்து எப்பவோ இட்டாச்சே பின்னூட்டம்!

அட,நேற்று நீங்கள் பாராட்டிப் பின்னூட்டமிட்ட 'சிந்திக்க வைக்கும் சிவாஜி'யை எழுதிய அதே ராமலக்ஷ்மிதாங்க நான்:))!

')) said...

சிவாஜியின் சங்கலித் தொடரில் நான் அழைப்பு விடுத்த சதங்காவினால் அழைக்கப் பட்டவராயிற்றே நீங்கள்!உங்கள் படைப்பை பார்க்காமல் இருப்பேனா? உங்க வீட்டுக் கண்ணுக்குட்டிய உச்சி முகர்ந்து எப்பவோ இட்டாச்சே பின்னூட்டம்!

அட,நேற்று நீங்கள் பாராட்டிப் பின்னூட்டமிட்ட 'சிந்திக்க வைக்கும் சிவாஜி'யை எழுதிய அதே ராமலக்ஷ்மிதாங்க நான்:))!

')) said...

ராம்லக்ஷ்மி

சிறிய குழப்பம் - நன்றி வருக்கைக்கும் கருத்துக்கும்

')) said...

செல்விஷங்கர் said...
//ராம்லக்ஷ்மி

சிறிய குழப்பம் -//

சிறிய குழப்பம் எப்படி வந்தது என்ற சிறிய குழப்பம் தீர்ந்தது:))!.