Monday, May 19, 2008

கோடையில் குளிர்ந்த மாலைப் பொழுது

கொட்டிய மழை
ஓடி மறைந்தது !

வெள்ளம் வடிந்த
சாலை ஓரம்
நிமிர்ந்த கிளைகள் !

ஓடிய பறவை
ஓய்ந்து நின்றது !

புதுமை ஒளியில்
புறம் நனைந்த
ஓட்டு வீடுகள் !

மின்வெட்டில்
பளிச்சிடும்
வண்டிவிளக்குகள் !

மின்னல் ஒளியில்
எட்டிப் பார்த்தால்
ஏதோ ஓரின்பம் !

கோடை வெயிலில்
குளிர்ந்த மாலைப்பொழுது !
குனிந்து குனிந்து
சின்னஞ் சிறுவர்
சிரித்து ஓடினர்
சிறிய பூக்கள்
நீரில் மிதந்தன !

செல்வி ஷங்கர்
-------------------

5 comments:

')) said...

குளிர்ந்த மாலைப் பொழுதினை அனுபவியுங்களேன்

')) said...

மேடம்,

//கோடை வெயிலில்
குளிர்ந்த மாலைப்பொழுது !//

வித்தியாசமான தலைப்பு மற்றும் வரிகள். நல்லாயிருக்கு கோடை மழை கவிதை !!!

')) said...

சதங்கா

நன்றி கருத்துக்கும் வருகைக்கும்

')) said...

ம்ஹும்ம்ம்ம்ம்ம்ம், கடைசில மதுரைல மழை பேஞ்சு, வெயில் தாழ்ந்துடுச்சாக்கும்.

நல்லா 'சில்'-லுன்னு நனைஞ்சீங்களா செல்வி அம்மா? ;-))))

சில்லுன்னு ஒரு கவிதை.நல்லா இருக்கு.:)

')) said...

புது வண்டே

ஆமா நல்ல மழை - குளிர்ந்த காற்று
குருவி எல்லாம் பறந்துச்சு - அதனாலே ஒரு பாட்டு