Sunday, May 25, 2008

புறத்தூய்மை - அகத்தூய்மை - ஒரு சிந்தனை

நாள்தோறும் நாடேடுகளைப் பார்க்கும் போது நம்மனம் நம்மை அறியாமலே ஒன்றைச் சிந்திக்கின்றது. அச்சிந்தனையின் விளைவே இச்சித்திரம் :
------------------------------------------------------------------------------------
உண்பதும் உறங்குவதும் உடுப்பதும் தான் வாழ்க்கை என்றால் ஒரு நொடி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். மனித இனம் ஒன்று தான் படைப்பிலிருந்து வளர்ந்திருக்கிறதாம். பிற உயிரினங்கள் எல்லாம் படைப்புக் காலத்தில் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறே தான் இன்று வரை இருக்கின்றனவாம் ! அப்படி என்றால் படைப்பிலேயே உயர்ந்த மக்களினம் தம் வளர்ச்சியால் பெற்ற பயனை உலகின் நன்மைக்கு வழி காட்ட வேண்டாமா ? எவ்வளவு தூரம் நாம் முயன்று முன்னேறி இருக்கின்றோமோ அந்த அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் நாம் வழி பிறழ்ந்து இருக்கிறோம். பாமரன் பத்துத் தவறு செய்தால் படித்தவன் பத்தாயிரம் தவறு செய்கின்றான் என்ற சிந்தனை காலமறிந்த உணமையாகி விட்டதே ! அத்தவற்றால் இயற்கையும் சமுதாய வளர்ச்சியும் அல்லவா கெடுகிறது ? எதிர் காலத்தைச் செவ்வையாகச் செய்ய வேண்டியவர்கள் நடைமுறையை அல்லவா பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எப்படிச் சமுதாயம் உருப்படும் ? ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி தன்னிலிருந்து நல்வழியை உருவாக்குவோம். முதலில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம் ! இல்லை எனில் காற்ருக்கும் நீருக்கும் நாம் கனலாய்ப் பறக்கும் காலம் வெகு தூரத்திலில்லை. புறத்தூய்மை அகத்தூய்மைக்கு வழி காட்டும் !!!

செல்வி ஷங்கர்
--------------------

7 comments:

')) said...

சிந்திப்போமா - செய்திச் சிதறல்களைப் பார்த்து !!

')) said...

அவசியமான சிந்தனை, செயலாக்கம் பெற வேண்டிய சிந்தனை.

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்புடன் ..... செல்வி ஷங்கர்
-------------------------------------------------

')) said...

/புறத்தூய்மை அகத்தூய்மைக்கு வழி காட்டும/

உண்மை தான்

')) said...

திகழ் மிளிர்

ஆம் உண்மைதான் -

')) said...

செல்வி அம்மா,
நலமா?

//எதிர் காலத்தைச் செவ்வையாகச் செய்ய வேண்டியவர்கள் நடைமுறையை அல்லவா பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எப்படிச் சமுதாயம் உருப்படும் ? //

இது 'நச்'.

/ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி தன்னிலிருந்து நல்வழியை உருவாக்குவோம்.
//

இது நடைமுறையில் சாத்தியம்.இந்த விஷயத்தில் சுயநலவாதியாகலாம் தானே? :D

//காற்ருக்கும் நீருக்கும் நாம் கனலாய்ப் பறக்கும் காலம் வெகு தூரத்திலில்லை. //

ம்ம்ம்...'குளோபல் வாமிங்' நம் கண் முன்னே ஆரம்பமாகிவிட்டதே :(

பி.கு.:சற்றுத் தாமதமாகிவிட்டது இப்பதிவைக் காண.வேலையே இல்லாமல் 'பிஸி' ஆகிவிட்டேனோ? :D ;-):D

')) said...

புது வண்டே !!

நலமே - நச்சென்ற கருத்தா ?

சுயநலவாதியில் இருந்து தான் பொதுநலவாதி பிறக்க வேண்டும்

நல்வழி தன்னில் பிறந்து பிறர்க்குச் செல்ல வேண்டும்

அன்புடன் ...... சீனா
--------------------