Thursday, April 10, 2008

இரண்டு மனம் !

தவத்திற்கு ஒருவர்
தமிழுக்கு இருவர்
இதை நினைக்கும் போதெல்லாம்
தனியாய்ப் பேசினால் ! எப்படி இருக்கும்
என்ற எண்ணம் தான் அடிக்கடி தோன்றும்.
சொல்லாத சொல்லும் சொல்லிவிட்ட சொல்லும்
அர்த்தமற்றது தான் - புரிந்து கொள்ளாத வரையில்
என்ற எண்ணச்சிறகும் பறக்கும் !

இரண்டாயிருப்பதில் இன்பம் உண்டு !
தனிமை நம் தனித் தன்மையைக் கொன்று விடும்.
பதவியில் இரண்டு ! பணியில் இரண்டு !
வாழ்க்கையும் இரண்டு ! வாழ்க்கை மலர்கள் இரண்டு !
அவை இரண்டு பாடங்களைச் சொல்லித் தந்தன.
ஒன்றாய் இருப்பது ( ஒற்றுமை) இன்பம் !
ஒளியின் சேர்க்கை இரண்டு தானே !
இல்லை எனில் காயேது கனியேது ?
கண்ணின் மணிகள் இரண்டு தான் !
மணியின் கண்களும் இரண்டு தான் !
அவை மனத்தில் மணக்கும் மயக்கம் !
ஒன்றென்ற உணர்வு ( தனிமை ) ஓடிப்போகும் !
நெஞ்சம் உவப்பாய் இருக்கும் !
எட்டிப் பார்க்கும் போதெல்லாம்
தொட்டுப் பார்க்கும் தொட்டில் குழந்தை போல்
துவண்டு போகும் மனம் !!!
துள்ளித் திரியும் மனம். !!!!

---------------------------------------

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

6 comments:

')) said...

//தனிமை நம் தனித் தன்மையைக் கொன்று விடும்.//

அடடா.. எப்டி வார்த்தைகள் விளையாடுது உங்களுக்கு.:)

உண்மையான வார்த்தைகள் அக்கா.:)

')) said...

ஆமாம் ஸ்ரீதர், நன்றி

')) said...

//தொட்டுப் பார்க்கும் தொட்டில் குழந்தை போல்
துவண்டு போகும் மனம் !!!
துள்ளித் திரியும்//

'தொட்டுப் பார்க்கும் தொட்டில் குழந்தை போல்'...

ம்ம்ம்ம்...ரசிச்சு எழுதியிருக்கீங்கமா...

'Best of Luck'-கு தமிழ்ல என்ன?

வெற்றி பெற வாழ்த்துகள்...:-)

')) said...

தமிழில் அழகாக வெற்றி பெற வாழ்த்துகள் என்பதே தமிழ் மொழி யாக்கம்தானே !!

நன்றி புது வண்டே

')) said...

/ஒளியின் சேர்க்கை இரண்டு தானே !
இல்லை எனில் காயேது கனியேது ?/

அருமையான வரிகள்

')) said...

நன்றி திகழ்மிளிர்