Thursday, April 10, 2008

இரண்டடியில் இன்பம் !

இன்பத்தைத் துன்பத்தை
ஏற்றத்தை இறக்கத்தை
உயர்வைத் தாழ்வை
உணர்வை உரிமையை
அன்பை அருளை
அடக்கத்தை ஒழுக்கத்தை
கல்வியை கல்லாமையை
செயலை பயனை
செப்படி வித்தையாய்
செதுக்கிய சிற்பி !!!

மனைவியை மக்களை
வாழ்வை இன்பத்தை
மனத்தை மகிழ்வை
நட்பை சுற்றத்தை
முயற்சியை வெற்றியை
அரசனை அமைச்சனை
பகையை படையை
நாட்டை மக்களை
உழவனை உணவை
உணர்த்திய வேந்தன் !!!

காலத்தை இடத்தை
செயலை வலிமையை
ஊக்கத்தை ஆக்கத்தை
உள்ளத்தை உணர்ச்சியை
பொன்னைப் பொருளை
செய்யும் முறையை
புவியைப் புகழை
புனிதமாய்க் காட்டிய
மனித தெய்வம் !!

இரண்டே அடியில்
உலகை அளந்த
உயர் பண்பாளன் !!
இரண்டாய்க் கண்ட
உலகில் இறையை
மட்டும் ஒன்றாய்க்
கண்ட உத்தமன் !!

இவனே எந்தன்
இசைத்தமிழ் வேந்தன் !!
இரண்டாம் தமிழின்
இலக்கணம் தந்த
இயற்றமிழ் புலவன் !!
மூன்றாம் தமிழாய்
வாழ்வைக் காட்டிய
முனிவன் !! தமிழ்மறை
தந்த தத்துவன் !!!
-----------------------------------
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

செல்வி ஷங்கர்

8 comments:

')) said...

பட்டையை கிளப்பிட்டீங்க...

அதுவும் வள்ளுவனை வாழ்த்தி போட்டி ஆரம்பமானது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...

')) said...

நன்றி வெட்டிப்பயல்

இரண்டாவது ஆக்கத்தைப் பார்க்க வில்லையா ?

')) said...

செல்வி அம்மா,

நலமா?...

வ.வா.ச.பதிவுக்கு வெற்றி பெற வாழ்த்துகள்.

கலக்குங்க :-)

')) said...

வாழ்த்துகள்

')) said...

புது வண்டே

நன்றி வாழ்த்துகளுக்கு

')) said...

மலர்,

நன்றி வாழ்த்துகளுக்கு

நலமா

புதிய பணி சிறக்க நல்வாழ்த்துகள்

')) said...

வாழ்த்துக்கள்

')) said...

நன்றி திகழ்மிளிர்