Friday, April 4, 2008

ஈரத்தோடு இணைந்திடுவோம் !!

குடிக்கத் தண்ணீர் !
கண்ணீர்தான் வருகிறது !
ஒற்றுமை ! ஒற்றுமை !
என்ற உணர்வே
வற்றி விட்டதா ?

உலகம் எப்படியோ
எல்லாம் விரிந்து
விரைவாகி விட்டது !
இருந்தும் நம்மனம்
சுருங்கி விட்டதே !

ஒன்றாய் இருந்தால்
கூடப் பங்கு !
அதிலும் எட்டில்
ஒன்று ! இதைத்
தரமனம் இல்லையே !

மக்களைத் தூண்டுவது
அரசியல் தானே !
காலமே ! காலத்தின்
மக்களே ! ஒன்று
பட்டு நினையுங்கள் !

மக்களே ! இயற்கையை
துண்டா டாதீர்கள்!
நீதிக்குத் தலை
வணங்கி நீரினைப்
பகிர்ந்து கொள்வோம் !

நீரில் குலமில்லையே !
கொதிப்படைவதற்கு !
நிறம் இல்லையே !
வெறுப்படைவதற்கு !
ஈரத்தோடு இணைந்திடுவோம் !


7 comments:

')) said...

படிக்க, சுவைக்க, கருத்து மழை பொழிய - ஒரு பா !

')) said...

மிக நன்று. நெஞ்சின் ஈரம் வற்றி போனவர்கள் ஈரத்தோடு இணைவது சாத்தியமா?

')) said...

நி.ந, நன்றி வருகைக்கு

முடியாததை எல்லாம் முடிந்ததாக நினைத்துப் பார்ப்பது தானே மனித மனம். நடக்காவிட்டால் நினைத்தாவது ஆறுதல் பெறலாமே !

')) said...

//குடிக்கத் தண்ணீர் !
கண்ணீர்தான் வருகிறது !
ஒற்றுமை ! ஒற்றுமை !
என்ற உணர்வே
வற்றி விட்டதா ?//

அக்கா... ”நச்”சின்னு கேட்டிருக்கிங்க..கவிதை சூப்பரு..:)

Anonymous said...

அருமையா இருக்கு செல்வி இந்தக் கவிதை...

காத்துக்கும் கடலுக்கும் சண்டைப் போடாம இருந்தாங்கன்னா சரிதான்!!
:(

')) said...

ரசிகன்,

கையில் இருக்கிற தண்ணீரை குடிக்காதே என்று தடுப்பது போல் இருந்தது எனக்கு. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் நச்சென்ற கவிதை. அவ்வளவுதான்.

')) said...

மல்லிகை,

ஆமா - இயற்கையையும் துண்டாட நினைத்தால் நாம் என்ன செய்வோமோ தெரியவில்லை என்ற ஏக்கம் தான் இப்போது !!!