Thursday, January 3, 2008

என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குபரே - புறம்

நட்பு உலகில் நனிசிறந்தது. ஏற்றத்தாழ்வு பாராதது. எல்லோரும் எல்லோரிடத்திலும் நட்புக் கொண்டு விடுவதில்லை. மழலை கூட தன்னைக் கனிவாய் பார்ப்பவரைத்தான் பார்த்துச் சிரிக்கும். அன்பு காட்டப்படும் பொழுது தான் சுவைக்கும்.

அன்று அரசன் புலவரிடம் நட்புக் கொண்டான். காரணம் நல்ல சிந்தனை! ஆற்றலும் வலிமையும் ஆதிக்கமும் உடைய அரசன் கவிஞனிடம் கனிவும் கருணையும் உடைய அன்பைச் செலுத்தினான். மாற்றார்க்கு மாறுபடும் சூரியனாய் உள்ள மன்னன், புலவர்க்கு குளிரூட்டும் தண்ணிலவாய் ஒளி வீசினான்.


வேல் தாங்கும் மார்பினை உடைய மாவீரன், தன் நெஞ்சைத் திறந்தால் மாண்புடை அன்பினை வெளிப்படுத்தினான். அதனால்தான் வறுமையிலும் செம்மையுடை புலவன் 'என் நெஞ்சம் திறப்போர் அங்கே உன்னைக் காண்பர்' என்றான் .


நாடோ மக்களோ நட்புடையவராய்த் திகழ்ந்தால் இந்த நன்னிலமே நம்முடையதுதான். அங்கே வேற்றுமை இல்லை! ஒற்றுமை ஒளி வீசும்! உலகம் உவகையால் ஒன்றுபடும்!

10 comments:

')) said...

சோதனை மறுமொழி

')) said...

நட்பின் இலக்கணத்தை இதை விட யார் அழகாகச் சொல்ல முடியும்

')) said...

உங்கள் எண்ணங்கள் பரவலாய் அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள்.
மூன்று பதிவுகளையும் பார்த்தேன். சில பதிவுகள் இன்னும் படிக்கவில்லை.

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா

')) said...

நல்ல கருத்துக்கள்.
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - ஜீவி

')) said...

நட்புகள் வாழ்க..வளர்க..தொடர்க உங்கள் எழுத்துப்பணி..

')) said...

நன்றி மலர், வருக்கைக்கும் வாழ்த்துக்கும்

')) said...

முஸ்தபா முஸ்தபா
டோண் வொர்ரி முஸ்தபா

மூழ்காத ஷிப்பே
ப்ரெண்ட்ஷிப்தான்.

')) said...

உட்கருத்தைச் சரியாக புரிந்தமைக்கு நன்றி சிவா - நட்பை விட சிறந்தது ஞாலத்தில் இல்லை.