Wednesday, November 7, 2007

ஒரு முன்னுரை ...........



இலக்கியங்கள் சில நேரங்களில் நம் சிந்தனையைக் கிளறுகின்றன; இதயத்தைத் தொடுகின்றன!. பாடலின் பொருள் ஆழத்தைப் பார்த்தால் அவை நம் மன ஆழம் வரைக்கும் செல்கின்றன. அந்தப் படைப்பாளன் வாழ்ந்த காலத்தையும், அவன் வாழ்ந்த வாழ்க்கைச் சூழலையும் வைத்துப் பார்த்தால் அவனால் எப்படி இப்படி எல்லாம் சிந்திக்க முடிந்தது என்று நமக்கே வியப்பாய் இருக்கிறது!

எத்தகைய கருத்தையும் அவன் தன் வாழ்வின் பட்டறிவோடு தான் சிந்தித்திருக்க முடியும். தமிழிலக்கியத்திலே புறப்பாடல்கள் சில இன்னும் காலத்தால் மனித மனங்களைப் புடம் போட்டுக்கொண்டிருக்கின்றன. திருக்குறளின் சீரிய கருத்துகள் இன்றும் கால ஓட்டத்தில் காலூன்றி நிற்கின்றன.

இந்த, காலத்தால் அழியாத காவியங்களைத் தீட்டிய கவிஞர்களை நினைத்துப் பார்த்தால் என் நெஞ்சம் விம்முகிறது!. நினைவுகள் சிதறுகின்றன!. நிகழ்வுகள் என்னைச் சிறைப் பிடிக்கின்றன!. அந்த நினைவோட்டத்தில் நான் என் சிந்தனைச் சிறகுகளால் சிறகடித்துப் பறக்கின்றேன்!. அதை என் ஏட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறேன்!. இது என் எண்ணம்!. என் எண்ணப்பறவை!. இப்பறவை வட்டத்துக்குள் சுற்றுவதால் இடை இடையே தொடக்கங்கள்!.

பதிவுகள் தொடரும்.

4 comments:

')) said...

கருத்தாய்வு கலக்குகிறது. தொடருங்கள். வாழ்த்துகள்

')) said...

நல்ல அனுபவங்களைத் தர வாருங்கள்.
வரவேற்கிறோம். ஆனா நாங்க புது தலைமுறை ஆளுங்க. அதனால சாதாரணமாவே எழுதுங்க.

')) said...

நன்றி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இனிய தீபத்திரு நாள் நல் வாழ்த்துகள்
மொழி நடை எல்லாம் அவரவர் இயல்பு. புரிந்து கொள்ள முயற்சி செய்க.

')) said...

நல்வரவு.