குட்டிக் குழந்தைகள்
முட்டி மோதிச்
செல்கின்றன !
அலைஅலையாய் நீரில்
இலைத்துளிர்கள்
அங்கும் இங்கும் !
கரையோரப் பறவைகள்
நீர் மேலே நீந்தும்
நிலவொளியாய் !
பொங்கிவரும் புதுநீரில்
பூப்போன்ற துளிர்கள்
புன்னகையாய் !
புல்மேலே கால்நடைகள்
தான்மேய புதுவரவாய்
காட்டாறு !
ஓடும் நீரில்
பாடும் பறவை !
குயில் கூடும்
மரக்கிளைகள் !
சலசலக்கும் நீரோடை !
வெள்ளைநிறப் பறவை
நீர்மேல் வெண்மேகம் !
வரிசையாய்க் காகங்கள்
வரைந்துவிட்ட கோடுகள் !
வானமழை வந்துவிட்டால்
வையமகள் செழிக்கின்றாள் !
வளமான நீரோட்டம்
வைகை எங்கும் !
பூம்புனல் ஆற்றை
பூந்தளிர் ஆறாய்
மாற்றுகின்ற
புதுவெள்ளம் !
Sunday, March 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
படிங்க - கருத்துச் சொல்லுங்க மக்களே
//கரையோரப் பறவைகள்
நீர் மேலே நீந்தும்
நிலவொளியாய் !//
//பொங்கிவரும் புதுநீரில்
பூப்போன்ற துளிர்கள்
புன்னகையாய் !//
//வரிசையாய்க் காகங்கள்
வரைந்துவிட்ட கோடுகள் !//
//பூம்புனல் ஆற்றை
பூந்தளிர் ஆறாய்
மாற்றுகின்ற
புதுவெள்ளம் !//
சிறுவயது முதலே மதுரைமீதும் மீனாட்சிமீதும் வைகைமீதும் இனந்தெரியாத ஈர்ப்பு உண்டு. தமிழ் கொஞ்சுகிறது; ரசித்துப் படித்தேன்.
கவி நயா,
இயற்கையின் ஈடுபாட்டில் ஒரு இன்பம் பிறக்கும். இயல்பாக காற்றடிக்கும் போதெல்லாம் கரையைத் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன். கவிதை அடிகள் தானாக வந்து விழுந்தன.
இதை மறுமொழியில் கண்டதும் மனம் மகிழ்கிறது - நன்றி
மேடம்,
குழந்தைகளோடு நீரை ஒப்பிட்டது அருமை. மற்றும் அந்தச் சூழலை விவரித்த அழகும் அற்புதம்.
சதங்கா,
குதிக்கும் குழந்தைகள் குதூகலம் தானே நன்றி
அழகு தமிழில் அருமையாக வடித்திருக்கிறீர்கள். உவமை நன்று. வைகையில் வெள்ளம் பார்க்க ஆசைதான். இப்போதும் வெள்ளம் வருகின்றதா?
வெள்ள வர்ணனை வெள்ளப் பிரவாகமாய்..காட்சிகளை நேரில் காண்பது போலுள்ளது..
நிஜமா நல்லவன்,
வைகையில் வெள்ளம் இப்பொழுதும் வந்து கொண்டு இருக்கிறது. எனக்கும் இது வியப்பாய் தான் இருக்கிறது. ஏனெனில் வைகையில் நீரைக் காண்பதே அரிது. இது காலத்தின் மாற்றம். நன்றி.
பாசமலர்,
வெள்ளத்தை நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு நாள்கள் எனக்கு அதுவே வேடிக்கையாயிற்று. அதன் விளைவு தான் இக்காட்சிகளின் கவி நடை. நன்றி
Post a Comment