பசுமை இல்லாத இளமை நினைவுகள் !
பயந்தே சென்ற பார்வைத் தொலைவுகள் !
எதிர்ப்புகளே ஏணிப் படிகளான காலம் !
எங்கே ? எப்படி ? என்ன செய்வது ?
என்றே ஏங்கிய கோலம் ! எதற்கும்
தூண்டுதல் இல்லா சூழல் ! எதிலும்
நம்பிக்கை தாரா நிழல்கள் ! இவைதான்
என் கைப்பிடிச் சுவர்கள் ! இதைப்
பற்றிக் கொண்டே பறந்தது பறவை!
எண்ணப் பறவை ! அதன் சிறகுகள்
எல்லாம் உரசல்கள் தான் ! அங்கே
ஒன்றும் தெளியாத உறுதிகள் ! எங்கும்
காலத்தின் கட்டாயம் வளர்ந்தது உயரே!
வளர வளர மாறுமல்லவா சூழல் !
அப்படி ஒரு மாற்றம் ஒரு நாள் !
எதிர்ப்புகள் என் சுற்றுச் சூழல் !
அதனோடு மோதி மோதி ஒரு
வடி வானது எண்ணம் ! வாழ்வின்
வசந்தம் வயதில் வந்தது ! ஏன்
என்று கேட்கவே எவரும் இல்லை !
எதிர்ப்புகள் இல்லா உலகம் ! இங்கே
ஏணிப் படிகளே இல்லாது ஏறினேன் !
இனிமை சிறகடித்துப் பறந்தது !
அங்கே சிந்தனை சீர்மை பெற்றது !
சிறிய பறவைகள் இரண்டு சிரித்தன!
என் சிறகின் கீழே நடந்தன !
அதன் வளர்ச்சியில் என்னைக் கண்டேன் !
ஏக்கங்களுக்கு விடுதலை ! ஆம் !
விண்ணில் பறந்தது பறவை ! எண்ணில்
வியப்பாய் இருந்தது உலகம் !
சொல்லுக்கும் அசைவுக்கும் சுகந்தம் தந்தனர் !
நிமிர்ந்தது நினைவு ! எப்போதும் இல்லாத
ஏற்றம் இப்போது வந்தது ! அது வளர்ச்சி !
நிகழ்காலப் பறவை நீந்துவது நிம்மதியில் !
பாசத்தைப் பரிவைப் பண்பைக் கொட்டுவது
எங்கும் எங்கும் ! நினைவெல்லாம் நீர்நிலையில் !
மனப்பறவை மகிழ்ந்தது ! மழைத்துளியில் நனைந்தது !
மானிடம் பார்ப்பது எதனை ? மனத்தையா ?
மானிலத்தின் மொழி அன்பு தானே !
அறங்கூறும் நல்லுலகும் அது தானே !
வாருங்கள் இங்கே இளைப் பாறலாம் !
-------------------------
செல்வி ஷங்கர்
-------------------------
Saturday, March 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
சோதனை மறு மொழி
மிகவும் அருமையான வரிகள்..வாழ்வின் உண்மைநிலை பேசுகின்றன..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாசமலர்
நல்லா இருக்குங்க, கவிதை நடையிலே கலக்கறீங்க!
நல்லா கலக்கறீங்க கவிதை நடையிலே, முதல் பின்னூட்டம் வந்ததா தெரியலை!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சென்ஷி
{ :)) உங்களுக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாதுன்னு உங்க பின்னூட்டத்த நானே போட்டுட்டேன். நீங்க நான் போட வேண்டிய பின்னூட்டத்த போடுங்க பார்ப்போம்}
நல்லாக் கவனிக்கிறீங்க - இனி மாத்திடுறேன்
ஆமா உங்க மறுமொழி நான் எப்படிப் போடுறது - உங்க நடை நான் பாத்ததே இல்லையே - ம்ம்ம் - பாராட்டுகளா குட்டுகளா - நீங்களே போட்டுடுங்களேன்
மேடம் இப்போதுதான் படித்தேன். நல்லாயிருக்கு... வாழ்வில் எல்லா பொறுப்புக்களையும் முடிக்கும் தருவாயில் வரும் நிம்மதி தெரிகிறது எழுத்துக்களில். :-)
எப்படியொரு அருமையான சிந்தனை!
என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
வணக்கம் கூறி வணங்குகிறேன் அம்மா!
தொடர்ந்து இப்படியே தாருங்கள்!
திர்ருக்குறள் பதிவுகளும் அற்புதமாயிருக்கின்றன!
நன்றி.
முமு
நன்றி மௌளி, சில நேரங்களில் பொறுப்புகள் நிறைவேறிக் கொண்டிருக்கும் போது நம்மை அறியாமலே ஒரு நிம்மதி தோன்றும். அப்பொழுது இது போன்று கவிதைகள் தானாக வரும்.
நன்றி திரு வீ.எஸ்,கே அவர்களே !
சொல்லாமல் சொல்கின்ற வித்தை மொழிகளுக்கெ உள்ள கலையாகும். தமிழில் சில தொடர்களைப் படிக்கின்ற போது உண்மையில் பெரிதும் வியப்பாய் இருக்கும் எனக்கு. அந்த நடை சில நேரங்களில் இவ்வாறு வந்து விடும்.
நன்றி
Post a Comment