Saturday, November 17, 2007

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன - புறம்

இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி. ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி. இது வாழ்க்கையை அனுபவித்த கவியரசின் கவிதைத் தொடர்கள். மனம் மயங்குகின்ற நேரங்கள் நம்மை அறியாமலே நம்மைச் செயல் படுத்துகின்றன. துன்பத்திலே மூழ்கித் துடிக்கின்ற போது நெஞ்சம் நினைக்கின்ற நினைவுகள் கீதையாகும்.

நம் செயல்களால் தான் நாம் சினங்கொண்டு இருக்கின்றோம். பின்னர் நல்லவையாய் அவை நடை போடுகின்றபோது அச்சினம் கீழிறங்கி அமைதி மெல்ல மெல்ல தலை தூக்குகின்றது. காலத்தின் சூழ்நிலையில் தனிமை ஒரு சுமை தான். ஓடி ஓடி உழைத்தபின் ஒரு நாள் ஓய்வு என்ற படியில் கால் வைக்கின்ற நம் நிலை நினைவலைகள் தடுமாறும் நிலையாமை தான்.

தொடக்கத்திற்கு முடிவு உண்டு. பிறப்பிற்கு இறப்புண்டு. இன்பத்திற்கும் மறு பக்கம் உண்டு. இயல்புக்கும் மாற்றம் உண்டு. இது கால ஓட்டத்தில் நம்மைச் சேருகின்றது. ஆனாலும் மனித மனம் தடுமாறுகிறது. பட்டறிவு பாடம் சொன்னாலும் பயன் நம்மை அலைக்களிக்கின்றது. ஆனாலும் இவற்றை எல்லாம் அந்தப் புறநானூற்றுக் கவிஞன் எப்படித்தான் ஒற்றை அடியில் அடக்கினானோ??

மனந் தெளிவோம்!!!

8 comments:

')) said...

சோதனை மறுமொழி

')) said...

நல்ல தமிழில் நல்ல கருத்துகளுடன் அருமையான பதிவு...தொடருங்கள்..வாழ்த்துகள்

')) said...

மறு மொழிக்கு நன்றி பாச மலரே - நல்ல தமிழ் பிடிக்குமா ??

')) said...

// செல்விஷங்கர் said...மறு மொழிக்கு நன்றி பாச மலரே - நல்ல தமிழ் பிடிக்குமா ??//
நல்ல தமிழ் எனக்கும் பிடிக்கும். தமிழ்மணத்துக்கு நல்வரவு. வாங்க நிறைய எழுதுங்கம்மா.

')) said...

நன்றி வித்யா - எழுதுகிறேன் - என் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன். ஓய்வுக் காலத்தை நல்ல முறையில் கழிக்க எழுதுகிறேன்.

')) said...

//
இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி. ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி.
//

ஏற்றமிருந்தால் இறக்கமும் இருக்கும் ஸ்டாக் மார்கெட்டும் இப்பிடித்தாங்க கண்ணாபின்னானு ஏறி இறங்குது.

ஏற்றத்தை சந்தோசமா ஏத்துக்கிற நம்மால இறக்கத்தை ஏத்துக்க முடியலியே!!

பழகிக்கணும்.

')) said...

பழகணும் பழகணும் - இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாகப் பார்க்க வேண்டும்.

')) said...

பழகணும் பழகணும் - இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாகப் பார்க்க வேண்டும்.

நன்றி சிவா