வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
வாயில் தோறும் வேதனை நிற்கும்.
நம் மானம் என்ற உயிர் காக்க மனக்கதவை மூடிக்கொண்டால் அது நாலு பக்கம் திறந்து கொள்ளும். அப்போது நம் நிலை எவ்வாறு இருக்கும் ?
ஒன்று நம் செயல்களுக்காக நம்மை நாமே நொந்து கொள்ளும் நிலை.
மற்றொன்று பிறரைக் காரணம் காட்டி மனம் மாறுபடும் நிலை. இது ஏன் ?
நம்முடைய வெற்றிகளுக்கும் நன்மைக்கும் நாம் எப்படிக் காரணம் ஆகின்றோமோ அது போல்தான் நம் துன்பங்களுக்கும் தோல்விகளுக்கும் நாம் தாம் காரணம்.
இன்பத்தைக் கண்டு மனம் மகிழ்கின்ற நாம் துன்பத்தைக் கண்டு
துவளும் போது பிறரைக் கை காட்டுகிறோம். தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை! நாமே தான் நம் செயல்களுக்குக் காரணம். நம்மை விட்டுப் பிரியாத நிழலைப் போன்று நம் செயல்களின் பயனும் நம்மைத்தான் பின் தொடரும்.
விதை விதைத்தால் பழம் பெறலாம்.
வினை விதைத்தால் வினைதான் விளையும்.
நல்வினை என்றால் நற்பயன். தீவினை என்றால் தீமைப்பயன்.
இதை நம் மனத்தில் கொண்டால் நாம் பிறர் மீது சினங் கொள்ள மாட்டோம். புன்னகைப்பது ஒன்றும் புரியாத தத்துவமில்லையே !
புரிந்து செயல்களைச் செய்வோம் ! புன்னகைப்போம் !!!
Wednesday, November 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நன்று,
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் அல்லவா!
நன்றி ஜீவா - வருகைக்கும் கருத்துக்கும் .
ஆம். செயல்கள் நம்மை வெளிப்படுத்துபவன தான்.
நல்ல அழகான அறிவுரைகளுடன் கூடிய பதிவு. பயனுள்ள பதிவு அதுவும் அழகுத்தமிழில். நன்றி.
வித்யா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//புன்னகைப்பது ஒன்றும் புரியாத தத்துவமில்லையே ! //
சரியாகச் சொன்னீர்கள் செல்விஷங்கர். ஆனாலும் ஒரு சிலருக்கு புன்னகைங்கற வார்த்தையே கசக்குதே :( என்ன செய்ய.
அவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்வதை தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.
- சகாரா.
புன்னகைப்பதற்கு புதிர் போடத் தெரிய வேண்டாம் - புரிந்து கொண்டால் போதும்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
மிகச்சரிதான்
இதை கருத்தில் நான் எழுதிய பதிவு நாம்தான் காரணம்
நன்றி சிவா வருகைக்கும் கருத்துக்கும் - நம்மை நாமே செம்மை படுத்திக் கொள்ள வேண்டும் சிவா
//வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
வாயில் தோறும் வேதனை நிற்கும்.//
வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
//நம் மானம் என்ற உயிர் காக்க மனக்கதவை மூடிக்கொண்டால் அது நாலு பக்கம் திறந்து கொள்ளும். அப்போது நம் நிலை எவ்வாறு இருக்கும் ?///
காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன்.
கண்ணதாசன் அதிகமா உங்களை பாதிச்சிருக்கார் போல இருக்கு. (நான் என்னை பாதிக்கலைன்னு சொன்னா அது பெரிய்ய பொய் )
//இதை நம் மனத்தில் கொண்டால் நாம் பிறர் மீது சினங் கொள்ள மாட்டோம். புன்னகைப்பது ஒன்றும் புரியாத தத்துவமில்லையே ! //
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியுள் சேறின்
மனமெங்கும் உண்டாம் மயக்கம் - உனக்கென்றும்
ஆக்கங்களும் வாராது வாழ்வதனில் இன்பமில்லை
தூக்கம் வருமோ சொல்
எப்போதோ எழுதியது :) இதைப் படிக்கையில் சட்டென்று நினைவுக்கு வந்தது
ஜீவ்ஸ்,
கண்ணதாசனின் பாதிப்பு இல்லாத பதிவர்கள் உண்டா என்ன ? வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி
Post a Comment