சின்னஞ்சிறு மலர்கள்
சிரிக்கின்றன! சிரிக்கும்
நேரம் சிந்தனைப்
பூக்கள் தெரிக்கின்றன!
தட்டித் தட்டிக்
கொடுத்து! எட்டி
எட்டிப் பார்த்த
எண்ணங்கள் நெஞ்சில்!
கட்டிக் கொடுத்த
சோறும்! கற்றுக்
கொடுத்த சொல்லும்
காலத்தில் சிறக்க!
குட்டிக் குருவிகள்
குலவும் குடும்பம்!
குழந்தைகள் கொஞ்சும்
கோகுலம்! ஆம்!
சிந்தை மணக்க
சிரித்து மகிழும்
சிறிசுகள் இங்கே!
உள்ளம் ஏங்கும்
உறவுகள் சிலிர்க்கும்!
காலம் கடந்த
பின்னும் கண்ணுள்
தோன்றும் காட்சிகள்
இங்கே! கருத்துகள்
மகிழும் கோப்புகள்!
செல்வி ஷங்கர்
Sunday, June 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
மறுமொழி ???
:)
அத்தைங்க ஞாபகம் வந்துருச்சாங்க ஆச்சி?
/கட்டிக் கொடுத்த
சோறும்! கற்றுக்
கொடுத்த சொல்லும்
காலத்தில் சிறக்க!/
கற்றுக் கொடுத்த சொல் சிறக்க, கடுந்தவம் தேவை!ஒவொருவரும் காலத்தே நினைத்து மகிழ வேண்டிய ஒன்று!
கவிதை நன்று! வாழ்த்துகள்!
--- நாடிக்கண்ணா.
//மறுமொழி ???//
இதோ :))
நினைவு கோப்புகள் பற்றி எளிமையாய் சொல்லியது அருமை மேடம்.
நிலாக்கண்னா, செல்லம்,
அத்தைங்க நினைவு அடிக்கடி வரும்ல - எப்படி வராமப் போகும்.
நீ நல்லாப் படி - பிரீகேஜி போறியா ?
நல்லாருடா செல்லம்
நாடிக்கண்ணா
அப்பப்பா வாம்மா - படி - பதில் போடு என்ன
சதங்கா
நன்றி
//கட்டிக் கொடுத்த
சோறும்! கற்றுக்
கொடுத்த சொல்லும்
காலத்தில் சிறக்க!//
மிகவும் அருமையான ஆழமான வரிகள்!
பாராட்டுக்கள்!
//தட்டித் தட்டிக்
கொடுத்து! எட்டி
எட்டிப் பார்த்த
எண்ணங்கள் நெஞ்சில்!//
தட்டித் தட்டி
எட்டி எட்டி.....
என்ன ஒரு அருமையான சந்தம்.
//காலம் கடந்த
பின்னும் கண்ணுள்
தோன்றும் காட்சிகள்
இங்கே! கருத்துகள்
மகிழும் கோப்புகள்!//
கோப்புகள் என்கிற வார்த்தை இங்கே, ஆழமாய்த் தோன்றுகிறது.
குட்டிக் குருவிகளின் முகம் கண்ணுக்குள் நிஜமாகவே தெரிகிறது.
அந்தோணி முத்து - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
புதுகை அப்துல்லா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment