சுற்றி அடித்தது காற்று
சுழற்றி அடித்தது கிளை !
கொட்டி முடித்தது மேகம்
கூவி அழைத்தது மழையை !
நனைந்து பறந்தது பறவை
மறைந்து நின்றது கிளையில் !
காற்றில் பறக்குது மழைநீர்
சாலை மறைத்தது வெள்ளம் !
சாய்ந்து ஆடின மரங்கள்
ஓடி நின்றன வண்டிகள்
ஓரம் போயினர் மக்கள்
மழையின் இடையே கால்கள்
மறைத்து மறைத்து மழலை !
செல்வி ஷங்கர்
--------------
Monday, May 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மழையின் அழகினை ரசியுங்கள்
'தக தீம் தரிகிட, தீம் தரிகிட, தீம் தரிகிட தித்தோம்'
ஏனோ தெரியவில்லை கவிதையின் முத்தாய்ப்பாய்(தொடர்ச்சியாய்), இது தான் என் மனதில் தோன்றியது.
சொற்கள் மழையின் வேகத்திற்கு சுழன்றடித்து ஆடுகின்றன அம்மா.
இரசித்தேன்.:))))
அதெப்படி மழைப்பாட்டுன்னா பாரதி மறந்தா போகும் ? எட்டுத் திசையும் மின்ன மழை எப்படி வந்தது வீரா - என்று பாரதியே கேட்ட கேள்வியல்லவா ?
அதனால் தான் கவிதையே
Post a Comment