கைப்பையை வைத்துவிட்டு களைப்பாய்ப் பார்க்கும் சங்கரன் ஒரு நாளும் தன் உணர்வை வெளிக் காட்டியதில்லை.
எப்போதும் சிந்தனை தான். சிரித்து மகிழ்வதற்கும் சில நேரங்கள் உண்டு என்பதை மறந்து போன முகம் அவனுடையது !
எப்பொழுதும் எங்காவது எதற்காவது ஓட்டிய சிந்தனையுடன் செயல்படுவது தான் அவன் வழக்கம் !!
ஆண்டுகள் ஐம்பதைக் கடந்தாலும் அதே இயக்கம் தான் அவனுடையது. அவன் எப்போது மனம் விட்டுச் சிரிப்பான் என்பது எவர்க்கும் தெரியவே தெரியாது.
அவனுக்குச் சீற்றம் வராமல் பார்த்துக்கொள்வது தான் மற்றவர் வேலை. இது எழுதாத விதி. விடை ஏக்கம் தான் பெருமூச்சு !
நாளாக நாளாக ஒன்று நன்றாய்ப் புரிந்தது. ஒன்றா இரண்டா ? ஓராயிரம் ! ஒன்று ஓய்ந்தால் மற்றொன்று தொடரும். இத்தனைக்கும் குருவிக்கூடு தான் அவன் வீடு .........
ஆனால் உண்ணவும் உறங்கவும் ஓய்வாக இருக்கவும் விடாத உறவுகள். ஒன்று ஓய்ந்தால் மற்றொன்று தலை தூக்கும் ! அது மூத்தவன் என்ற முன்னுரிமையால்!!
இதிலெல்லாம் விடுபட்டு எப்படிச் செயல் படுவது என்ற எண்ணம் தான் அவன் ஓட்டம். எப்படியோ உழைத்துப் பிழைத்துக் கொண்டிருந்தான் இம்சை செய்யும் உறவுகளுக்கிடையே.
வானில் ஒரு சூரியனும் உண்டல்லவா? கார்மேகங்களுக்கிடையே! வாடிய காலங்களெல்லாம் போய் வளம் காணும் காலமும் வந்தது. கண்மணிகள் வளர்ந்தன. வாழ்வில் ஒளி கூட்டின ! மலர்ச்சிப் பார்வையால்!
கண்மலர்கள் படிப்படியாய் வளர்ந்தன. ஆம் - படித்தே வளர்ந்தன. உழைத்து உழைத்து ஓய்வின்றிச் செல்லும் தந்தையை நோக்கின. செயலாற்றும் கரங்கள் செழுமை பெற்றன. தன்னம்பிக்கையால் தலை நிமிர்ந்தான்.
சூரிய ஒளியைக் கண்டு தலை சாய்க்கும் சன்னல் பூக்களாய் பெற்றோர் மனங்கள் மகிழ்ந்தன மக்களின் செயல்பாட்டில்!
காலத்தில் முடித்து விட்ட கடமைகள் கண் சிமிட்டின அவன் முன்னே. கனிவாய் இருந்தது அவன் மனம். கண்கள் சிரித்தன. உதடுகள் புன்னகைத்தன.
ஒழுங்காய் முடித்த கடமையில் உவக்கும் உள்ளம் போல் எட்டிப்பார்த்தது இளமை. ஆம். முதுமையில் இளமை. இது என்ன முரண்பாடு. சில நேரங்களில் முரண்பாடுகள் சுவை கூட்டும் அல்லவா ? அப்படி ஓர் சுவை.
தனித்து விடப்பட்ட உள்ளம் அடிக்கடி நினைப்பது இதனைத்தான். சாதனை என்பது தன்னைச் சரியாய் நடத்துவதும் தானே !!!!
------------------------------------------------------------------------------------------------
Wednesday, April 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
என்ன படித்தீர்கள் - ஏதாவது எழுதுங்களேன்.
நிறைவு பெற்ற மனமே
நித்யானந்தம்...!
சங்கரனாருக்கு வாழ்த்துக்கள்.
//ஒழுங்காய் முடித்த கடமையில் உவக்கும் உள்ளம் போல் எட்டிப்பார்த்தது இளமை. ஆம். முதுமையில் இளமை. இது என்ன முரண்பாடு. சில நேரங்களில் முரண்பாடுகள் சுவை கூட்டும் அல்லவா ? அப்படி ஓர் சுவை.//
இந்தச் சுவைதான் வாழ்க்கைக்கான அர்த்தமே அல்லவா?
//தனித்து விடப்பட்ட உள்ளம் அடிக்கடி நினைப்பது இதனைத்தான். சாதனை என்பது தன்னைச் சரியாய் நடத்துவதும் தானே !!!!//
நன்று சொன்னீர்கள். தன்னைச் சரியாய் நடத்துவதே மிகப் பெரிய சாதனைதான்..
//சாதனை என்பது தன்னைச் சரியாய் நடத்துவதும் தானே !!!!//
செல்வி அம்மா,
சாதனை என்பது தன்னைச் சரியாய் நடத்துவது(_) தான்!
எவரஸ்ட் சிகரம் ஏறினாலும் உச்சிக்குப்போகச் சரியான நடை :-)தேவை; எண்ணிய வாழ்க்கை வாழவும் உறுதியான நடை தேவை;
எவரஸ்டின் பனிச்சுறாவளியும் பள்ளமும் வாழ்க்கையின் பிறதி தான்;
சாதனை என்பது தன்னைச் சரியாய் நடத்துவது(_) தான்!
-இப்படிக்கு மலையின் கீழே இருந்து குறிப்பெடுக்கும் வண்டு.
பி.கு.: தமிழ்மணத்திலிருந்தே படித்துவிட்டேன் இப்பதிவை :-). ஆழ்ந்த வரிகள்; ஊடுருவும் உண்மை; சிகரம் ஏறும் அத்தனை பேரின் +/- டைரிக் குறிப்பு;
ஜீவா,
பட்டறிவு சொல்கின்ற பாடம் இது. போதும் என்ற மனம் பொன் செய்யும் மருந்து. அது பூப்போல எப்போதாவது மலருவது தானே !! நன்றி
பாசமலர்,
வாழ்க்கையின் அர்த்தம் அவ்வளவு எளிதில் புரிந்து விடுவதில்லை. போராட்டங்களின் முடிவில் தான் அது புரியத் தொடங்குகிறது. புன்னகைப் பூக்களுக்கு புதுப் பொலிவு தருவதே அந்த நினைவுதான். நன்றி
வண்டே !! தன்னைச் சரியாக நடத்துவதே சாதனை என்பதைப் புரிந்து கொள்ள ஒரு மலையேற்றம் தேவை. அதில் தட்டுத் தடுமாறுவதெல்லாம் படிப்பினை ஆகும் போது நமக்குப் பட்டறிவு பிறக்கிறது.
//சாதனை என்பது தன்னைச் சரியாய் நடத்துவதும் தானே !!!!//
சூப்பர்மா :)
vaazhkaiyae por kallam,
vaazhndhu thaan paarkanum!
por kallam maaralaam,
porgal thaan maarumaa?
sodhanaigalayae paarthu sorndhu pogum manadhirkku, seiyum kadamai,
or naal saerkkum saadhanai! vaazhvu malarum, niraivu milirum- yena annaal noki ayaraadhu thodara,
arumaiyaana sindhani!
Nandri Mei!
- noddykanna
சஞ்செய்
ஆம் - சில நேர சிந்தனைகள் நேரங்கடந்தே நமக்கு நினைவூட்டுகின்றன. ம்ம்ம்ம்ம்
நாடிக் கண்ணா
உண்மைதான் - போர்க்களம் மாறலாம் - போர்கள் மாறுவதில்லை. போராட்டம் ஒன்றே போதிக்கும் அதன் உண்மையை.
Post a Comment